புதன், 7 ஏப்ரல், 2010

துபாய் நண்பர்கள்

வலைப்பதிவு அன்பர்களே


இது என்னுடய முதல் பதிவு நான் துபாயில் கடந்த 15 வருடமாக துபாயில் வேலை செய்கிறேன்  என்னை மிகவும் கவர்ந்த அன்பர்கள் பற்றிய ஒரு பதிவு............

இப்ராகிம்

நாங்கள் துபாய் வந்தவுடன் ஒரு கட்டிட நிறுவனத்தில் கூலி வேலை செய்யும் ஆளாக வேலைக்கு அமர்தப்பட்டோம் அப்போது எங்களுடைய டிரைவர் ஆக வேலை செய்தவர் எங்களுடைய ஒரே அன்பை பெற்றவர் எங்களுடைய வேலை சோர்வு எல்லாம் அவரை கண்டவுடன் மறந்து போகும் அவர் ஒரு ஈரான் நாட்டை சார்ந்தவர் அவர் பாடும் ஒரே பாடல் ராஜா ஹிந்துஸ்தானி படத்தில் வரும் பரதேசி பரதேசி ஜனானகி என்கிற ஹிந்தி பாடல் பாடலை பாடி எங்களை சந்தோஷபடுத்துவார்
நல்ல நண்பர் எல்லோருக்கும் உதவுபவர் அவர் பல்லாண்டு வாழ வாழ்த்துவோம்.
இப்ராஹிம் அலி
இவர் எங்கள் அரபி அப்படி ஒரு இரக்கமான மனிதர் நான் ஒரு ஹிந்துவனாலும் என்னை அவருடய பாசமிகு நண்பராகதான் பாவிப்பார் கூலி வேலை பார்த்த என்னை எங்கள் அலுவலகத்தில் அலுவலக உதவியாளராக என்னை நியமனம் செய்தார் மேலும் மேல்நிலை இரண்டாம் ஆண்டு வரை படித்த என்னை ஓட்டுநர் உரிமம் எடுக்க சொல்லி என்னை மீண்டும் உயர்த்தி இப்போது நான் PRO ஆக வேலை செய்கிறேன்.என்னை அறிமுக மாகும் போது ஒரு விசிட்டிங் கார்டை கொடுத்து இதை படி என்று சொன்னார் வேறு எந்த கேள்வியும் கேட்க வில்லை அதை நான் வாசித்தவுடன் நாளை முதல் அலுவலகத்தில் வேலை பார் என்று கூறி என்னை அவரோடு இணைதுக்கொண்டார் பல நேரம் எனக்கு வீடு கட்ட பணம் கொடுத்து உதவுவார் இதுவரை நான் பலதடவை ஊருக்கு திரும்பி செல்கிறேன் என்று கூறினாலும் அவருக்கு என்னை விட மனம் இல்லை. என் வாழ் நாளில் மறக்க முடியாத மனிதரான அவர் பல்லாண்டு வாழ்க என்று வாழ்த்தி அடுத்த பதிவில் நண்பர்கள் பற்றி விரிவாக   கூறுகிறேன் ..............................

அன்பன் பெ.நடேசன்
துபாய்
தவறு இருந்தால் மன்னிக்கவும்